Monday 19 March 2012

9 அடி உயரத்தில் முரசுக் குதிரை Digger



எலிசபெத் ராணியின் வைர விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் முரசுக் குதிரை

எலிசபெத் ராணியின் பட்டமேற்பு வைரவிழாவில், 9 அடி உயரத்தில் முரசுக்குதிரை ஒன்று பங்கேற்க உள்ளது.பிரிட்டனில் எலிசபெத் ராணியின் பட்டமேற்பு வைரவிழா இந்த ஆண்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க 9 அடி உயரத்தில் முரசுக் குதிரை ஒன்று தயாராகி வருகிறது.
டிகெர் (Digger) என்றழைக்கப்படும் இந்தக் குதிரைக்கு ஹைடி பார்க்கில் வைத்து ஒரு நாளைக்கு 25 கிலோ உணவும், 100 லீற்றர் தண்ணீரும் வழங்கப்பட்டு எடை கூட்டப்படுகிறது.
வைர விழாவின் போது முதுகில் சில்வர் முரசுகளைச் சுமக்க வேண்டியிருப்பதால் அதற்கான வலிமையைப் பெற குதிரைக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இந்தக் குதிரையைப் பராமரித்து வரும் அலெக்ஸ் ஓவென் என்ற ரெஜிமெண்ட் அதிகாரி, இந்தக் குதிரை சாதுவாக இருக்கிறதென்றும் சொன்னபடி கேட்டு நடக்கிறது என்று தெரிவித்தார்.
வைரவிழாக் கொண்டாட்டத்திற்கு முன்பே, இதன் எடையைக் கூட்டி முரசுகளைச் சுமக்கும் வகையில் தயார்படுத்திவிடுவேன் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.
இத்தகைய முரசுக் குதிரைகளுக்கு பயிற்சியளிக்க 18 மாதங்கள் ஆகும். அதன் பின்பு இக்குதிரைக்கு கிரேக்கப்பெயர் சூட்டப்படும். டிகெர் குதிரையோடு டியூக்(Duke) என்ற குதிரையும் உயரமான குதிரையாக முன்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment