Wednesday, 1 August 2012


ஆடி கடைசியில் அந்தியூர் குருநாதசுவாமி கோயில்


ஆடி கடைசியில் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா 5 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு இப்போதெல்லாம் 6 லட்சம் பேருக்கு மேல் கூடுவார்கள். இதிதிருவிழாவை ஒட்டி நடக்கும் குதிரைச்சந்தையும், மாட்டுச்சந்தையும் தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற சந்தையாகும். ஐதர் அலி காலத்திற்கு முன் இருந்து இந்த சந்தை நடை பெற்று வருகிறது. 

இப்பொழுது எல்லாம் அங்காங்கே பொருட்காட்சி நடத்தி ராட்டினம், பைக்ரேஸ் போன்றவை நடத்துகிறார்கள். சிறுவயதில் எங்களுக்கெல்லாம்  ராட்டினம் என்றால் அந்தியூர் திருவிழா தான் ஞாபகத்திற்கு வரும்.
 
அந்த 5 நாட்களும் தினமும் சென்று ராட்டினம் மற்ற விளையாட்டுக்கள் ஒவ்வொன்றையும் விளையாடினால் தான் திருப்தி. எங்க பெரியப்பா கட்சி பதவியில் இருந்ததால் எங்களுக்கு பாஸ் கிடைக்கும் அதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு விளையாட்டையும் தினம் தினம் ரசித்து ரசித்து விளையாடுவோம்.
 
அதற்கடுத்த நாள் எங்க குடும்பத்தின் கிடா விருந்து அந்தியூர் வனத்தில் நடக்கும் இதில் சொந்த பந்தம் மற்றும் நண்பர்களோடு இன்று வரை வருடா வருடம் கிடா விருந்து களை கட்டும் அவர்கள் சொந்தத்தில் அவர்களின் விருந்து மறுபடியும் எப்ப எப்ப என்று கேட்கும் அளவிற்கு கொண்டாடுவார்கள்...இந்த வருடமும்...

No comments:

Post a Comment