Friday 16 March 2012

குதிரை சேணம்
 
கண்டுபிடித்த காலம்:1280ஆம் ஆண்டு

கண்டுபிடித்தார்:பண்டைக்காலச் சீனர்
1280ஆம் ஆண்டு, குதிரை மீது வசதியாக அமர்ந்து செல்வதற்காகப் பண்டைக்கால சீனர் முதலில் குதிரைச் சேணத்தைக் கண்டுபிடித்தனர். குறிப்பாக சுன் மற்றும் யுவான் வம்சக் காலங்களில் இதன் தயாரிப்பு மிகவும் உயர் நிலையை எட்டியிருந்தது.
வரலாற்றில் குதிரைச் சேணத்தின் கண்டுபிடிப்பு சவாரி செய்வதில் மட்டுமல்ல, படையில் குதிரைப் படைப்பிரிவின் உருவாக்கத்திலும் மாபெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், படிப்படியாக போர் மேடையிலிருந்து விலகிய குதிரைகளின் மீதான சவாரி நவீன வாழ்க்கையிலும், மக்கள் மிகவும் விரும்பும் ஒரு பொழுதுபோக்கு வழிமுறையாகும். அதில் குதிரைச் சேணம் இன்னும் ஈடிணையற்ற பங்காற்றி வருகின்றது.

No comments:

Post a Comment