Friday 16 March 2012

குதிரை

      குதிரை (Horse) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்கு. இது சுமார் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்பட்ட ஒரு விலங்கு ஆகும். இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. பண்டைய காலம் முதல் தற்போது வரை நாடுகளின் படைகளில் குதிரைப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. குதிரைகளைக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது. இதன் சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பால் போன்றவை பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகின்றன.
      குதிரைகளின் கர்ப்பக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக் குட்டிகள் பிறந்த கொஞ்ச நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன. ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன. குதிரைகளின் ஆயுள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும். சராசரியாக ஒரு குதிரை 60 முதல் 62 இன்ச் உயரம் வரை வளரும். கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த ப்ரௌன் நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன.
      குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் குணம் கொண்டவை குதிரைகள்.

No comments:

Post a Comment