குதிரை (சீன சோதிடம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குதிரைசீன சோதிடத்தின் ஏழாவது குறி ஆகும். 1930, 1942, 1954, 1966, 1978, 1990, 2002, 2014,
2026, 2038 ஆகிய வருடங்கள் குதிரை வருடம் ஆகும். இந்த வருடத்தில்
பிறந்தவர்கள் புத்திசாலித்தனம்,பிடிவாதம் மற்றும் பல்திறன் தன்மை
கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.பொருளடக்கம்
- 1 பெயர்க்காரனம்
- 2 இயல்புகள்
- 3 இராசி அம்சங்கள்
- 4 குதிரை வருடத்தைய பிரபலங்கள்
- 5 குதிரை வருடத்தில் உதயமான நாடுகள்
- 6 இதையும் பார்க்கவும்
- 7 உசாத்துணை
- 8 வெளி இணைப்புகள்
பெயர்க்காரனம்
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டது. இதற்க்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். போட்டியின் தொடக்கத்தில் எலி, எருது, புலி, முயல், டிராகன் ஆகியவற்றை தொடர்ந்து குதிரை ஆறாவதாக வந்தது. இறுதியில் கரையை நெருங்கும் நேரத்தில் இதன் குழம்பில் இருந்து பாம்பு ஒன்று வெளிப்பட்டது. இதனால் குதிரை பயந்து சற்று பின்வாங்கிய நேரத்தில், பாம்பு முந்திக்கொண்டு ஆறாவதாக கரையை அடைந்தது. ஏழாவதாக கரையை அடைந்த குதிரையை கடவுள் ஏழாவது வருடக்குறியாக அறிவித்தார்.குதிரை ஏழாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
இயல்புகள்
நேரம்
காலை 11:00 முதல் மதியம் 1:00 வரை
உரிய திசை
தெற்கு
உரிய காலங்கள்
கோடை காலம் (சூன்)
நிலையான மூலகம்
நெருப்பு
யின்-யான்
யான்
ஒத்துப்போகும் விலங்குகள்
நாய், புலி, ஆடு
ஒத்துப்போகாத விலங்குகள்
எலி, குரங்கு
இராசி அம்சங்கள்
குதிரை வருடத்தைய பிரபலங்கள்
- பாரதியார்
- பாலமுரளி கிருட்டினா
- இந்திரா காந்தி
- சங்கர் தயாள் சர்மா
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- ஆர். கே. நாராயணன்
- சிவசங்கரி
- கமல்காசன்
- அமிதாப் பச்சன்
- கிளின்ட் ஈசுடுவுட்
- ஃகாரிசன் போர்ட்
- சனட் சாக்சன்
- மைக் டைசன்
- டேட்டி ரூசுவெல்ட்
- வாரன் பபெட்
குதிரை வருடத்தில் உதயமான நாடுகள்
இதையும் பார்க்கவும்
உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள்
சீன சோதிடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன சோதிடம் (Chinese Astrology) என்பது 12 விலங்குகளை அடிப்படையாக கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு சோதிட முறை
ஆகும். இதில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு 12 வருடங்கள், 5 மூலகங்கள் மற்றும் யின்-யான் எனப்படும் சீனத்
தத்துவம் ஆகியவை சேர்த்து 60 வருடங்கள் கொண்ட ஒரு சக்கர வடிவில் சீன
சோதிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின்
பிறந்த வருடம், மாதம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின்
எதிர்காலம் கணிக்கப்படுகின்றது.
புத்தர் தனது இறுதி நாட்களில் இந்த சோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். கி.மு 2600 -ல் பேரரசர் குவாங் தீ காலத்தில் விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்ட பின்பு, கான் பேரரசின் காலத்தில் இது மிகுந்த வளச்சியுற்றது. சீனாவில் இது சாதாரன சோதிடக் கலையாக மட்டும் இல்லாமல், சீனத் தத்துவங்களின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இந்த சோதிடக் கலையின் அடிப்படையிலேயே சீனப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தின் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
1. எலி
2. எருது
3. புலி
4. முயல்
5. டிராகன்
6. பாம்பு
7. குதிரை
8. ஆடு
9. குரங்கு
10.சேவல்
11.நாய்
12.பன்றி
சீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.எனவே இவை நடைமுறையில் உள்ள ஆங்கில நாள்காட்டியுடன் சரியாக ஒத்துப் போவதில்லை. சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் இருந்து புது வருடம் கணக்கிடப்படுகின்றன.
1980 ஆம் வருடம், மார்ச் மாதம் 26 ஆம் திகதி, காலை 7.45 மணிக்கு பிறந்த ஒருவரின் உள்குறிகள்,
புத்தர் தனது இறுதி நாட்களில் இந்த சோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். கி.மு 2600 -ல் பேரரசர் குவாங் தீ காலத்தில் விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்ட பின்பு, கான் பேரரசின் காலத்தில் இது மிகுந்த வளச்சியுற்றது. சீனாவில் இது சாதாரன சோதிடக் கலையாக மட்டும் இல்லாமல், சீனத் தத்துவங்களின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இந்த சோதிடக் கலையின் அடிப்படையிலேயே சீனப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தின் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அடிப்படை
சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.சீன ஆண்டுகள்
புத்தர் முக்தி அடைந்து, இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது, உலகிலுள்ள அனைத்து விலங்குகளிடமும் விடை பெற்றுச் செல்ல வேண்டி, சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று வந்தவை பன்னிரண்டே. எனவே அவ்வாறு வந்த விலங்குகளுக்கு மதிப்பு தரும் வகையில், அவை வந்த வரிசையின் அடிப்படையில், ஒவ்வொரு விலங்கின் பெயரையும் பன்னிரண்டு சீன ஆண்டுகளுக்கும் வைத்தார். மேலே கூறப்பட்ட கதையின் அடிப்படையிலேயே சீன ஆண்டுகள் விலங்குகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை,1. எலி
2. எருது
3. புலி
4. முயல்
5. டிராகன்
6. பாம்பு
7. குதிரை
8. ஆடு
9. குரங்கு
10.சேவல்
11.நாய்
12.பன்றி
சீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.எனவே இவை நடைமுறையில் உள்ள ஆங்கில நாள்காட்டியுடன் சரியாக ஒத்துப் போவதில்லை. சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் இருந்து புது வருடம் கணக்கிடப்படுகின்றன.
சீன ஆண்டு அட்டவனை
வருடம்
விலங்கு
வருடம்
1924–1983
1984–2043
1
பெப்ரவரி 05 1924–சனவரி 23 1925
எலி
பெப்ரவரி 02 1984–பெப்ரவரி 19 1985
2
சனவரி 24 1925–பெப்ரவரி 12 1926
எருது
பெப்ரவரி 20 1985–பெப்ரவரி 08 1986
3
பெப்ரவரி 13 1926–பெப்ரவரி 01 1927
புலி
பெப்ரவரி 09 1986–சனவரி 28 1987
4
பெப்ரவரி 02 1927–சனவரி 22 1928
முயல்
சனவரி 29 1987–பெப்ரவரி 16 1988
5
சனவரி 23 1928–பெப்ரவரி 09 1929
டிராகன்
பெப்ரவரி 17 1988–பெப்ரவரி 05 1989
6
பெப்ரவரி 10 1929–சனவரி 29 1930
பாம்பு
பெப்ரவரி 06 1989–சனவரி 26 1990
7
சனவரி 30 1930–பெப்ரவரி 16 1931
குதிரை
சனவரி 27 1990–பெப்ரவரி 14 1991
8
பெப்ரவரி 17 1931–பெப்ரவரி 05 1932
ஆடு
பெப்ரவரி 15 1991–பெப்ரவரி 03 1992
9
பெப்ரவரி 06 1932–சனவரி 25 1933
குரங்கு
பெப்ரவரி 04 1992–சனவரி 22 1993
10
சனவரி 26 1933–பெப்ரவரி 13 1934
சேவல்
சனவரி 23 1993– பெப்ரவரி 09 1994
11
பெப்ரவரி 14 1934–பெப்ரவரி 03 1935
நாய்
பெப்ரவரி 10 1994–சனவரி 30 1995
12
பெப்ரவரி 04 1935–சனவரி 23 1936
பன்றி
சனவரி 31 1995–பெப்ரவரி 18 1996
13
சனவரி 24 1936–பெப்ரவரி 10 1937
எலி
பெப்ரவரி 19 1996–பெப்ரவரி 06 1997
14
பெப்ரவரி 11 1937–சனவரி 30 1938
எருது
பெப்ரவரி 07 1997–சனவரி 27 1998
15
சனவரி 31 1938–பெப்ரவரி 18 1939
புலி
சனவரி 28 1998–பெப்ரவரி 15 1999
16
பெப்ரவரி 19 1939–பெப்ரவரி 07 1940
முயல்
பெப்ரவரி 16 1999–பெப்ரவரி 04 2000
17
பெப்ரவரி 08 1940–சனவரி 26 1941
டிராகன்
பெப்ரவரி 05 2000–சனவரி 23 2001
18
சனவரி 27 1941–பெப்ரவரி 14 1942
பாம்பு
சனவரி 24 2001–பெப்ரவரி 11 2002
19
பெப்ரவரி 15 1942–பெப்ரவரி 04 1943
குதிரை
பெப்ரவரி 12 2002–சனவரி 31 2003
20
பெப்ரவரி 05 1943–சனவரி 24 1944
ஆடு
பெப்ரவரி 01 2003–சனவரி 21 2004
21
சனவரி 25 1944–பெப்ரவரி 12 1945
குரங்கு
சனவரி 22 2004–பெப்ரவரி 08 2005
22
பெப்ரவரி 13 1945–பெப்ரவரி 01 1946
சேவல்
பெப்ரவரி 09 2005–சனவரி 28 2006
23
பெப்ரவரி 02 1946–சனவரி 21 1947
நாய்
சனவரி 29 2006–பெப்ரவரி 17 2007
24
சனவரி 22 1947–பெப்ரவரி 09 1948
பன்றி
பெப்ரவரி 18 2007–பெப்ரவரி 06 2008
25
பெப்ரவரி 10 1948–சனவரி 28 1949
எலி
பெப்ரவரி 07 2008–சனவரி 25 2009
26
சனவரி 29 1949–பெப்ரவரி 16 1950
எருது
சனவரி 26 2009–பெப்ரவரி 14 2010
27
பெப்ரவரி 17 1950–பெப்ரவரி 05 1951
புலி
பெப்ரவரி 15 2010–பெப்ரவரி 02 2011
28
பெப்ரவரி 06 1951–சனவரி 26 1952
முயல்
பெப்ரவரி 03 2011–சனவரி 22 2012
29
சனவரி 27 1952–பெப்ரவரி 13 1953
டிராகன்
சனவரி 23 2012–பெப்ரவரி 09 2013
30
பெப்ரவரி 14 1953–பெப்ரவரி 02 1954
பாம்பு
பெப்ரவரி 10 2013–சனவரி 30 2014
31
பெப்ரவரி 03 1954–சனவரி 23 1955
குதிரை
சனவரி 31 2014–பெப்ரவரி 18 2015
32
சனவரி 24 1955–பெப்ரவரி 11 1956
ஆடு
பெப்ரவரி 19 2015–பெப்ரவரி 07 2016
33
பெப்ரவரி 12 1956–சனவரி 30 1957
குரங்கு
பெப்ரவரி 08 2016–சனவரி 27 2017
34
சனவரி 31 1957–பெப்ரவரி 17 1958
சேவல்
சனவரி 28 2017–பெப்ரவரி 18 2018
35
பெப்ரவரி 18 1958–பெப்ரவரி 07 1959
நாய்
பெப்ரவரி 19 2018–பெப்ரவரி 04 2019
36
பெப்ரவரி 08 1959–சனவரி 27 1960
பன்றி
பெப்ரவரி 05 2019–சனவரி 24 2020
37
சனவரி 28 1960–பெப்ரவரி 14 1961
எலி
சனவரி 25 2020–பெப்ரவரி 11 2021
38
பெப்ரவரி 15 1961–பெப்ரவரி 04 1962
எருது
பெப்ரவரி 12 2021–சனவரி 31 2022
39
பெப்ரவரி 05 1962–சனவரி 24 1963
புலி
பெப்ரவரி 01 2022–சனவரி 21 2023
40
சனவரி 25 1963–பெப்ரவரி 12 1964
முயல்
சனவரி 22 2023–பெப்ரவரி 09 2024
41
பெப்ரவரி 13 1964–பெப்ரவரி 01 1965
டிராகன்
பெப்ரவரி 10 2024–சனவரி 28 2025
42
பெப்ரவரி 02 1965–சனவரி 20 1966
பாம்பு
சனவரி 29 2025–பெப்ரவரி 16 2026
43
சனவரி 21 1966–பெப்ரவரி 08 1967
குதிரை
பெப்ரவரி 17 2026–பெப்ரவரி 05 2027
44
பெப்ரவரி 09 1967–சனவரி 29 1968
ஆடு
பெப்ரவரி 06 2027–சனவரி 25 2028
45
சனவரி 30 1968–பெப்ரவரி 16 1969
குரங்கு
சனவரி 26 2028–பெப்ரவரி 12 2029
46
பெப்ரவரி 17 1969–பெப்ரவரி 05 1970
சேவல்
பெப்ரவரி 13 2029–பெப்ரவரி 02 2030
47
பெப்ரவரி 06 1970–சனவரி 26 1971
நாய்
பெப்ரவரி 03 2030–சனவரி 22 2031
48
சனவரி 27 1971–பெப்ரவரி 14 1972
பன்றி
சனவரி 23 2031–பெப்ரவரி 10 2032
49
பெப்ரவரி 15 1972–பெப்ரவரி 02 1973
எலி
பெப்ரவரி 11 2032–சனவரி 30 2033
50
பெப்ரவரி 03 1973–சனவரி 22 1974
எருது
சனவரி 31 2033–பெப்ரவரி 18 2034
51
சனவரி 23 1974–பெப்ரவரி 10 1975
புலி
பெப்ரவரி 19 2034–பெப்ரவரி 07 2035
52
பெப்ரவரி 11 1975–சனவரி 30 1976
முயல்
பெப்ரவரி 08 2035–சனவரி 27 2036
53
சனவரி 31 1976–பெப்ரவரி 17 1977
டிராகன்
சனவரி 28 2036–பெப்ரவரி 14 2037
54
பெப்ரவரி 18 1977–பெப்ரவரி 06 1978
பாம்பு
பெப்ரவரி 15 2037–பெப்ரவரி 03 2038
55
பெப்ரவரி 07 1978–சனவரி 27 1979
குதிரை
பெப்ரவரி 04 2038–சனவரி 23 2039
56
சனவரி 28 1979–பெப்ரவரி 15 1980
ஆடு
சனவரி 24 2039–பெப்ரவரி 11 2040
57
பெப்ரவரி 16 1980–பெப்ரவரி 04 1981
குரங்கு
பெப்ரவரி 12 2040–சனவரி 31 2041
58
பெப்ரவரி 05 1981–சனவரி 24 1982
சேவல்
பெப்ரவரி 01 2041–சனவரி 21 2042
59
சனவரி 25 1982–பெப்ரவரி 12 1983
நாய்
சனவரி 22 2042–பெப்ரவரி 09 2043
60
பெப்ரவரி 13 1983–பெப்ரவரி 01 1984
பன்றி
பெப்ரவரி 10 2043–சனவரி 29 2044
மூலகம்
சீன சோதிடத்தில் மொத்தம் ஐந்து மூலகங்கள் உள்ளன. மரம், நெருப்பு, உலோகம், நீர் மற்றும் பூமி ஆகிய இவை அனைத்தும் தனியே அன்றி யின்-யான் சக்திகளுடன் சேர்த்தே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மூலகமும் ஒவ்வொரு குறிகளின் தன்மைகளை ஆளும் சக்தி கொண்டவையாக கருதப்படுகின்றன.மூலக அட்டவனை
மூலகம்
வருடக்குறி
மரம்
முயல், புலி (மெலிந்த), டிராகன் (வலுத்த)
நெருப்பு
பாம்பு, குதிரை (வலுத்த), ஆடு (மெலிந்த)
உலோகம்
குரங்கு (வலுத்த), சேவல், நாய் (மெலிந்த)
நீர்
எலி (வலுத்த), எருது, பன்றி (மெலிந்த)
பூமி
டிராகன், ஆடு, நாய், எருது (சம நிலையில் இருப்பதால் அனைத்து குறிகளின் தன்மைகளை ஆள வல்லது.)
யின்-யான்
யின் மற்றும் யான் எனப்படுபவை இந்த உலகத்தை ஆளும் இரு வேறு நேர் எதிர் சக்திகள் என சீனத் தத்துவம் கூறுகின்றது. இரவு-பகல், ஆண்மை-பெண்மை என்று இவ்வாறான நேர் எதிர் யின்-யான் சக்திகளே போட்டி போட்டுக் கொண்டு இந்த உலகத்தை இயக்குவதாக சீன சோதிடம் கூறுகின்றது. இவ்விரு சக்திகளின் ஆளுமை ஒரு மனிதனின் நடவடிக்கைகளை மாற்ற வல்லது என சீன சோதிடம் குறிப்பிடுகின்றது.யின் கூறுகள்
எதிர்மறை சக்தி, கருப்பு, அடிமைத்தனம், நீர், உலோகம் மற்றும் பூமி ஆகியவை யின் கூறுகள் ஆகும். இவை இரவு, பள்ளத்தாக்கு, நதிகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றைச் சார்ந்தது.யான் கூறுகள்
நேர்மறை சக்தி, ஆளுமை, நெருப்பு, மரம் மற்றும் காற்று ஆகியவை யான் கூறுகள் ஆகும். இவை பகல், மலைகல் மற்றும் குன்றுகள் ஆகியவற்றைச் சார்ந்ததுயின்-யான் அட்டவனை
யின் யான் ஆகியவை மரம், நெருப்பு, பூமி, உலோகம், நீர் ஆகிய ஐந்து மூலகங்களுடன் சேர்த்து கணிக்கப்படுகின்றது. இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வருகின்றன. எனவே வருட முடிவு எண்ணைக் கொண்டே இதை சுலபமாக கணிக்கலாம். மாதங்கள் போல அல்லாமல் சீன வருடங்கள் ஆங்கில வருடங்களை ஒத்து வருவதால் இதைக் கணிக்க ஆங்கில ஆண்டு முறையையே பயன்படுத்தலாம்.- வருட முடிவு 0 ஆக இருந்தால் - யான் உலோகம்
- வருட முடிவு 1 ஆக இருந்தால் - யின் உலோகம்
- வருட முடிவு 2 ஆக இருந்தால் - யான் நீர்
- வருட முடிவு 3 ஆக இருந்தால் - யின் நீர்
- வருட முடிவு 4 ஆக இருந்தால் - யான் மரம்
- வருட முடிவு 5 ஆக இருந்தால் - யின் மரம்
- வருட முடிவு 6 ஆக இருந்தால் - யான் நெருப்பு
- வருட முடிவு 7 ஆக இருந்தால் - யின் நெருப்பு
- வருட முடிவு 8 ஆக இருந்தால் - யான் பூமி
- வருட முடிவு 9 ஆக இருந்தால் - யின் பூமி
உள்குறி
சீன சோதிடத்தில் அதன் வருடங்கள் மொத்தம் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு, அவைகளுக்கு பன்னிரெண்டு விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, அதன் மாதங்களும் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு அவற்றிர்கும் அதே விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் நாள்களும் இரண்டு மணிகளுக்கு ஒரு காலம் என்ற விகிதத்தில் மேலும் பன்னிரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவையே சீன சோதிடத்தின் உள்குறிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த உள்குறிகள் ஒரு மனிதனின் குணாதிசயங்களை நுணுக்கமாக அறியப் பயன்படுத்தப்படுகின்றன.மாதக் குறி அட்டவனை
சூரிய
ரேகை தேதி சீன
மாதம் நிலையான
முகம் காலம் தேதி சூரிய
ரேகை
ரேகை தேதி சீன
மாதம் நிலையான
முகம் காலம் தேதி சூரிய
ரேகை
1
314
பெப் 4 - பெப் 18
புலி
மரம்
வசந்த காலம்
பெப் 19 - மார்ச் 5
329
2
344
மார்ச் 6 - மார்ச் 20
முயல்
மரம்
வசந்த காலம்
மார்ச் 21 - ஏப் 4
0
3
14
ஏப் 5 - ஏப் 19
டிராகன்
மரம்
வசந்த காலம்
ஏப் 20 - மே 4
29
4
44
மே 5 - மே 20
பாம்பு
நெருப்பு
கோடை காலம்
மே 21 - சூன் 5
59
5
74
சூன் 6 - சூன் 20
குதிரை
நெருப்பு
கோடை காலம்
சூன் 21 - சூலை 6
89
6
104
சூலை 7 - சூலை 22
ஆடு
நெருப்பு
கோடை காலம்
சூலை 23 - ஆக 6
119
7
134
ஆக 7 - ஆக 22
குரங்கு
உலோகம்
இலையுதிர் காலம்
ஆக 23 - செப் 7
149
8
164
செப் 8 - செப் 22
சேவல்
உலோகம்
இலையுதிர் காலம்
செப் 23 - அக் 7
181
9
194
அக் 8 - அக் 22
நாய்
உலோகம்
இலையுதிர் காலம்
அக் 23 - நவ 6
211
10
224
நவ 7 - நவ 21
பன்றி
நீர்
குளிர் காலம்
நவ 22 - டிச 6
244
11
251
டிச 7 - டிச 21
எலி
நீர்
குளிர் காலம்
டிச 22 - சன 5
271
12
284
சன 6 - சன 19
எருது
நீர்
குளிர் காலம்
சன 20 - பெப் 3
301
நேரக் குறி அட்டவனை
நேரம்
குறி
1
23:00 - 1:00
எலி
2
1:00 - 3:00
எருது
3
3:00 - 5:00
புலி
4
5:00 - 7:00
முயல்
5
7:00 - 9:00
டிராகன்
6
9:00 - 11:00
பாம்பு
7
11:00 - 13:00
குதிரை
8
13:00 - 15:00
ஆடு
9
15:00 - 17:00
குரங்கு
10
17:00 - 19:00
சேவல்
11
19:00 - 21:00
நாய்
12
21:00 - 23:00
பன்றி
கணிப்பு
சீன சோதிடம் ஒருவர் பிறந்த வருடத்தைக் கொண்டு அவரின் பொதுவான குணங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கூறுகின்றது. அதோடு அவரின் உள்குறிகளைக் கொண்டு நுணுக்கமான அளவிலும் அறிய முடிகின்றது. இந்த உள்குறிகள் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன.1980 ஆம் வருடம், மார்ச் மாதம் 26 ஆம் திகதி, காலை 7.45 மணிக்கு பிறந்த ஒருவரின் உள்குறிகள்,
- வருடக்குறி - வலுத்த குரங்கு - (1980 ஆம் வருடத்தில் பிறந்ததால்)(உலோக மூலத்தில் பிறந்ததால்)
- யின் யான் சக்தி - யான் சக்தி (வருட முடிவு '0' வாக இருப்பதால்)
- மாதக்குறி - முயல் (மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளின் இடைப்பட்ட நாளில் பிறந்ததால்)
- நிலையான மூலகம் - மரம் (முயல் மாதத்தில் பிறந்ததால்)
- காலம் - வசந்த காலம் (முயல் மாதத்தில் பிறந்ததால்)
- நேரக்குறி - டிராகன் (காலை 7.00 மற்றும் 9.00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்ததால்)
இதையும் பார்க்கவும்
உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள்
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ள சித்ரா சிவக்குமார் எழுதிய சீன விலங்கு சோதிடம் மின் புத்தகம் (பிடிஎப் வடிவில்)
- Chinese Astrology online calculator
- Chinese astrology website with software and online calculator
- Chinese Zodiac Chart
- Chinese astrology and Feng Shui international network
- Chinese Animal Signs Website
- Bazi Destiny (八字命理) Life Analysis
- Chinese Astrology (Ba Zi) free articles, professional training, distant support
No comments:
Post a Comment