Monday, 26 March 2012

கடல் குதிரை

கடல் குதிரை
கண்களை எந்தப் பக்கமும் திருப்பி, குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப் பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல மைப்பை பொறுத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும், உடல் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையிலும் இருக்கிறது.

No comments:

Post a Comment