Saturday, 31 March 2012

லண்டன் போர்ட்டபெல்லா குதிரைப் பந்தய மைதானம், ரிக்கர்டன் பார்க்

லண்டன் போர்ட்டபெல்லா  குதிரைப் பந்தய மைதானம், ரிக்கர்டன் பார்க்   குதிரைப் பந்தய மைதானம்,
        
                             ரிக்கர்டன் பார்க் என்ற பெயரில் ஏகப்பட்ட இடத்தை வளைச்சுப் போட்டுருக்கு. இதுக்கு வயசு 150 வருசம். கிறைஸ்ட்சர்ச் நகர் உருவானபோதே கூடவே சேர்ந்துக்கிட்டதுதான். மனுசன் குடியேறும்போதே குதிரை ஓட்டமும் வந்துருக்கு.

வருசத்துக்கு அங்கே 20 நாட்கள் மட்டுமே குதிரைப் பந்தயங்கள் நடக்கும். பாக்கி நாட்கள் எல்லாம் சும்மாக் கிடக்கறதுதான். ஒரு இருபது வருசத்துக்கு முன்னே எந்தப் புண்ணியவானோ இதை நம்ம மக்களுக்கும் சமூகத்துக்கும் பயன்படும்படியா ஆக்கலாமேன்னு யோசிச்சதில்......
முழுக்கட்டிடத்தையும் புனரமைச்சு மாடியில் பந்தயம் பார்க்க கேலரிகள்.கீழே ஏழு ஹால்கள் அமைச்சுட்டாங்க. எல்லா ஹால்களுக்கும் குதிரைப்பந்தய சம்பந்தமுள்ள பெயர்கள். ஃபாப்லேப்( Phar Lap) என்ற பெயரில் ஒரு ஹால் இருக்கு. இது நியூஸிக் குதிரை. அண்டைநாடான அஸ்ட்ராலியாவில் ஏகப்பட்டப் பந்தயங்களில் கலந்து சரித்திரம் படைச்சது. ஆனால் ஆறே வயசுலே சாமிகிட்டே போயிருச்சு. எதிரிகள் விஷம் வச்சுட்டாங்கன்னு அப்போ பெரிய புரளியா இருந்துச்சு. நெருப்பில்லாமல் புகையுமா? கடைசியில் அதுதான் உண்மை:( குதிரை இறந்து 76 வருசம் ஆனபிறகு நிபுணர்கள் கண்டு பிடிச்சுட்டாங்க.

ஃபார்லேப்பின் (எதையும் தாங்கும்) இதயம் அஸ்ட்ராலியா (கென்பரா) தேசீய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுருக்கு. அதன் தோலை மட்டும் எடுத்து நியூயார்க் சிடி டாக்ஸிடெர்மிஸ்ட் ஒருத்தர் அசல் குதிரை செஞ்சு கொடுத்துட்டார். மெல்பேர்ண் கப் ரேஸ் ஆரம்பிச்சு 150 வருசம் ஆச்சுன்னு அந்தக் கொண்டாட்டத்துக்குக் கடன் வாங்கிட்டு போயிருக்காங்க. இப்போ மெல்பெர்ண் ம்யூஸியத்துலே உயிர்ப்புடன் நிக்குது. (மனுசன் தோல்தான் எதுக்கும் லாயக்கில்லை) எலும்பை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன்னு முழு எலும்புக்கூடும் நியூஸி வெலிங்க்டன் மியூஸியத்துலே! தன் மறைவுக்குப்பிறகு கூட மூணு இடத்தில் நினைவுச்சின்னமா நிக்குது பாருங்க.
இங்கே பொதுவா சனிக்கிழமைகளில்தான் குதிரைப் பந்தயங்கள் நடக்கும். அதுவும் கடுங்குளிர் காலங்களில் ரெண்டு மாசத்துக்கு இருக்காது. 345 நாட்கள் காலியாவேக் கிடக்கும் கார்பார்க், அதைச்சுற்றியுள்ள இடங்களையெல்லாம் இப்போ ஒரு பதினைஞ்சு வருசமா ரோட்டரி க்ளப் மார்கெட் நடத்திக்க விட்டுட்டாங்க. அதான்  சண்டே மார்கெட். சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு காலத்துலே இந்த மார்கெட் . நம்மூட்டுக்கு முன்னால் இருந்த ஷாப்பிங் செண்டர் கார்பார்க்குலேதான் ஆரம்பிச்சாங்க. நானும் குக்கர் ஆனதும் அரைமணி நேரம் நீராவியெல்லாம் அடங்கவிட்டுட்டு சாலயைக்கடந்து போய் மார்கெட்டை வேடிக்கை பார்த்துட்டு வருவேன். இப்ப மார்கெட் ரொம்ப விரிஞ்சுக்கிட்டே போய் சவுத் ஐலண்ட்லே பெருசுன்னு டூர்ஸ்ட் மேப்லே இருக்கு, லண்டன் போர்ட்டபெல்லா ரோடு மார்கெட் மாதிரி:-.

No comments:

Post a Comment